தேசிய ரீதியில் சாதனை
எமது கல்லூரி மாணவர் குழு கொழும்பிலே நடைபெற்ற 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட தமிழ் மொழித்தின தமிழறிவு வினாவிடைப் போட்டியில் பங்குபற்றி தேசிய நிலையில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர். இக் குழுவில் பங்குபற்றிய மாணவர்கள் வருமாறு..
வ.சரவணபவன்
ச.குகப்பிரியா
த.கஸ்தூரி
நி.கீர்த்தனா
ஸ்ரீ.ரம்மியா
இம் மாணவர்களை வாழ்த்துவதோடு மேலும் இவர்கள் சாதனைகள் படைக்க வாழ்த்துகின்றோம்.அகில இலங்கை ரீதியில் தங்கப்பதக்கம்
அகில இலங்கை உயிரியல் ஒலிம்பியாட் போட்டி - 2010 இல் எமது கல்லூரி மாணவன் செல்வன் ஸ்ரீமுருகதாஸ் விசாகன் தங்கப்பதக்கத்தைப் பெற்று எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். உயிரியற் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையில் ஒவ்வொரு வருடமும் இப்போட்டிப் பரீட்சை நடாத்தப்படுவது குறிப்படத்தக்கது.
தேசிய மட்டத்தில் முதலிடம்.
எமது கல்லூரியில் தரம் 11 இல் கல்விபயிலும் மாணவி செல்வி ஸ்ரீ.ரம்மியா , சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு தேசிய ரீதியில் ”சிறுவர் உலகம் ஒளிபெற அனைத்து கரங்களையும் வலுவுட்டுவோம்” என்ற தொனிப் பொருளில் நடத்திய கட்டுரைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று 10000 ரூபா பணப் பரிசிலையும் சான்றிதழையும் மாண்பு மிகு ஐனாதிபதி அவர்களிட்ம் இருந்து பெற்றுக் கொண்டார்.
தமிழ் மொழித்தினம் தேசிய மட்டத்தில் சாதனை.
தமிழ் மொழித் தினம் - 2009 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்டப் போட்டியில் பிரிவு IV கட்டுரை எழுதுதலும் இலக்கியம் நயத்தலும் எனும் விடயத்தில் எமது கல்லூரி மாணவன் செல்வன் இ.இராஐப்பிரவிந்தன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்று எமது கல்லூரிக்குப் புகழ் சேர்த்துள்ளார். இம் மாணவன் மேலும் சிறப்புப் பெற வாழ்த்துவதோடு இவரை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.
வடமாகாண சாரணர் பாசறை - 2010.
மேற்படி சாரணர் பாசறையில் கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பாக எமது கல்லூரியின் சாரணர் அணியினர் 21 பேர் பங்குபற்றினர். யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாகவுள்ள பழைய புங்காவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் தலைவராக வடமாகாண சாரணர் ஆணையாளர் திரு.போஐன் விளங்கினார். இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு 15-05-2010 காலை 10 மணியளவில் ஆரம்பமானது. பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் திரு சந்திரசிறி, அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வருகை தந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக இலங்கை சாரணர் தலைவர் பட்டுவாங்கல மற்றும் திட்டப் பணிப்பாளர் திரு பிரதீபன், யாழ்நகர சபை மேஐர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment