Our school ~ J/Chavakachcheri Hindu College

Our school



பாடசாலைக் கீதம்

பல்லவி
வாழ்க இந்துக் கல்லூரி – வாழ்கவே
வாழ்க இந்துக் கல்லூரி – வாழ்கவே

அனு பல்லவி
வாழ்க நம்திரு வாழ்க நம் கலை
நாழும் நன்மையும் உண்மையும் ஓங்கவே
                      (வாழ்கவே)
சரணம்
அறமும் அன்பும் அருளும் தழைக்கா
ஆன்மநேய உணர்வு செழிக்க
உறவு கனிந்தே உயர்வு நிலைக்க
உலகில் புகழும் அறிவும் தரிக்க
                      (வாழ்கவே)


 தூரநோக்கும் பணிக்கூற்றும்


VISION
Make the institution a leading one in the country by producing good citizens with knowledge and personality.

தூரநோக்கு
ஆளுமையும் அறிவாற்றலும் உள்ள நற்பிரயைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் ஒரு முன்னணிப்பாடசாலையாக விளங்க வைத்தல்.

MISSION
Provide enough strength and courage to all students to face the challenges of the modern trend in concord with the national policies of education in the context of Hindu Tamil traditions.

பணிக்கூற்று
தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப சகல மாணவர்களையும் வழிப்படுத்தி, சைவத்தமிழ் மரபுகளையும் விழுமியங்களையும் பேணி, நவீனத்துவத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்கான பலத்தையும் அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு வழங்குதல்.


 சின்னம்


     மக்களிடையே உயர்ந்த எண்ணங்களை வளர்ப்பதற்கு சின்னங்கள் பயன்படுகின்றன. கோவில்கள், விக்கிரகங்கள், சிவசின்னங்கள் சைவர்களின் தரத்தை உயர்த்தும் சிறப்பு வாய்ந்தது. அதில் ஓர் உறுதி மொழி மெலெ  நீர்நிலை அதன் மேல் தாமரை மலர் அதன் இரு மருங்கிலும் கதிரீன்று தலை வணங்கி நிற்கும் நெற்கதிர்கள், கிழக்கே சூரியன், அதன் பின்னர் நீலவானம். சற்று மேலே கல்லூரிப் பெயர் முதலெழுத்துக்கள் அவற்றிற்கிடையே சுவஸ்திகா யோகக் குறி என்பன காணப்படுகின்றன.

கல்வியின் குறிக்கோள் சிவத்தை அடைதல், சிவம், நன்மை, நலம் என்பன ஒரு பொருட்சொற்கள். இன்பம் வேறு. நன்மை வேறு. இன்பம் நிலையற்ற புல இன்பத்தை மட்டும் குறிக்கும். நன்மையோ அதனையும் உள்ளடக்கி பண்பட்ட உள்ளத்தால் அனுபவிக்கும் நிலையான இன்பத்தை அல்லது வீடுபேற்றைக் குறிக்கும். அந்தச் சிவானந்தம் இம்மையும் அம்மையும் ஒருங்கே நலந்தருவது என்கிறார் சுந்தரர். கல்வியின் நோக்கத்தை மறவாத - வெறும் பொருள் இன்பத்தை மட்டும் கருதாதே - அது நீடிக்க அக இன்பத்தையும் நாடி, அதற்காக முயற்சி செய். அதற்கான அறிவு விளங்கட்டும் என்ற உறுதி வாக்கியம் உள்ளது. அதனைப் பெறுவது எப்படி?

சின்னங்கள் விளக்குபவை:

1. நீர்நிலை:

எம் செயல் யாவரையும் குளிரச்செய்யும் அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அன்பு இணைக்கும் பசை. அதன் பயன் மாணவர் - ஆசிரியர் - அதிபர் மனமொன்றிணைந்த செயற்பாடு.

2. தாமரைமலர்:

அப்பொழுது இதுவரை குவிந்து மொட்டாய் இருந்த இதயத்தாமரை மலர்கின்றது. மொட்டு தன்னளவில் மட்டும் வளர்ச்சி மலர் தானும் பொலிந்து தன்னை அடுத்தவரையும் மகிழ வைப்பது. அது மட்டுமல்ல.
எப்பக்கத்தில் இருந்து வரும் ஒளிர்க்கதிர்களையும் ஏற்கும் சிறப்பு வாய்ந்தது. அறிவு எங்கிருந்து வரினும் நட்புரிமையோடு ஏற்கும் மனப்பான்மையைக் குறிக்கிறது.

3. உதயசூரியன்:

அப்பொழுது மாணவன் உள்ளத்தில் அடங்கியிருந்த அறிவு வெளிப்படுகிறது. அறிவுக்கு எல்லையில்லை. இறக்கும் வரை தேடினாலும் பூரணமடைந்து விட்டேன் என செருக்குக் கொள்ளாமல் எல்லாக் காலங்களிலும் எல்லாப் பொருட்களிலும் இருந்தும் அறிவைத் தேடும் மனப்பான்மை இருக்க வேண்டும் எனப் பாதிச்சூரியன் போதிக்கின்றது.

4. நெற்கதிர்:

மாணவப் பயிர் அந்த நீர் வரம்புள் வளர்ந்து காய் முற்றி தலை குனிந்து ஒன்றோடொன்று ஒழுங்குபட இணைய முயல்கிறது. உண்மையான கல்வியால் நிறைந்த மாணாக்கர் நிலையைக் காட்டுகிறது. அவர்கள் கல்லூரியின் கட்டுப்பாட்டை மதித்து நடப்பதன் மூலம் தாமும் பயன் பெற்று தம்மை அடுத்தவர்களுக்கும் உதவுகின்றார்கள். இவ்வளவையும் தரும் நிறுவனமாக இந்த இந்துக் கல்லூரி உள்ளது.

5. சுவாஸ்திகாக் குறியீடு:

புலனடக்கம், சிந்தையடக்கம், ஆர்வம், சிரத்தை என்பன சேரும் போது ஆற்றல் மிக்க மக்களை உருவாக்கும் சக்தி மிக்க நிலையமாக இந்துக் கல்லூரி விளங்கும் என்ற ஆர்வத்தை இது காட்டுகிறது. இவை மட்டுமல்ல. இதனை உற்றுக் கவனிக்கும் போது, இன்னும் பல கல்வித் தத்துவங்கள் புலனாகும்.


கல்லூரிக் கொடி





கல்லூரிக் கொடியும் மனிதன் பெற வேண்டிய நற்பேற்றின் சின்னமாக விளங்குகின்றது. அவன் எந்த நலத்தைப் பெற விரும்பினாலும் தன்னை மையமாகக் கொண்டே சிந்திக்கிறான். செயற்படுகிறான். அதனால் முரண்பாடுகளும் போராட்டங்களும் அழிவுச்சிந்தனைகளும் வளர்கின்றது.

நீலம்:

தன் நல்வாழ்வு ஏனையோருக்குப் பாதகமில்லாமல் அமைய ஒருவன் செயற்படுவதற்கு உலகத்தின் போக்கை சிறப்பாக மனித உள்ளங்களின் போக்கை அறிந்திருக்க வேண்டும். ஒவ்வோர் உயிராகவும் தான் இருந்து அவற்றின் உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தைப் பரந்த மனப்பான்மை என்கின்றோம். கடலும் விண்வெளியும் நீல நிறமானவை. மனிதன் நலம் பெற வேண்டுமானால், குளிர்மையும் விண்போல் பரந்த மனப்பான்மையும் வேண்டும் என்பதை நீலம் குறிப்பிடுகின்றது.

வெண்மை:

அதற்கு அடுத்த படி வெண்மை தோற்றுகிறது. வெள்ளை நிறம் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இல்லாத தூய்மையைக் குறிக்கிறது. அத்துடன் அறிவொளியைக் குறிக்கிறது. ஏனெனில் அடிப்படை நிறங்களின் கலவையான வெள்ளொளியே பொருளின் உண்மைத்தன்மையை உள்ளபடி காட்டுகிறது. பரந்த மனத்தோடு கூடிய அறிஞர்களின் பார்வையையே சைவசித்தாந்தம் திருவருளின் துணை கொண்டு பார்க்கும் போதே, சிவத்தைக் காணலாம் என்கிறது.

மஞ்சள்:

பரந்ததும் தூய்மையான அறிவு என்னும் திருவருள் கொண்டு அறிவை விருத்தி செய்தால் மட்டும் போதாது. மனிதன் தானும் மகிழ்ந்து தன்னை அடுத்தவரையும் மகிழ வைக்கும் ஆற்றல் பெற வேண்டும். அந்த அறிஞன் செல்லும் இடமெல்லாம் அமைதியும் மகிழ்வும் நிலவ வேண்டும்.

2 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Twitter Bird Gadget