Development of Building ~ J/Chavakachcheri Hindu College

Development of Building



1935;-பிரதான மண்டபம் கட்டப்பட்டது.

1945:-பழைய ஆய்வு கூடம் தற்போதய B மண்டபம்

1949:-பெறோர் ஆசிரியர் சங்கக் கூடம் முற்பகுதி – தற்போது இல்லை

1952:-தொடக்கப் பள்ளிக்கென தண்டவாளக் கட்ட்டம் பெற்றோர் ஆசிரியர்

சங்க்க் கட்ட்டம்பிற் பகுதி (எந்து ஆரம்பப் பாடசாலை- தற்போது)

1955:-கைவேலைக் கட்டடம் (தற்போது இல்லை)

1962:-பழை மாணவர் சங்க விஞ்ஞான ஆய்வு கூட ஆரம்பம் O.S.A(SCIENCE BLOCK)

1963:-இரண்டாவது கிணறு கட்டப்பட்ட்து (ஆய்வு கூட அண்மை)

1964:-அரசினர் கட்ட்டம் 9 வகுப்பறைகள் (E,Block)

1966:- தண்டவாளக் கட்டடத்தை அடுத்து மூன்று வகுப்பறைகள் விளையாட்டு நில விஸ்தரிப்பு.

1968:-திற்ந்த வெளியரங்கு (சுப்பிரமணியம் திறந்த வெளியரங்கு)

1971:-அரசு வழங்கிய ரூபா 25,000 ஐச் செலவிட்டு 5 வகுப்பறைகள் (J Block) கட்டப்பட்டன.

1972:-அரசின் உதவியின்றி பழைய மாணவர் சங்கம் விஞ்ஞான ஆய்வு கூட வேலைகளை நிறைவேற்றியது. அரசு வழங்கிய ரூபா 26,000 ஐ செலவிட்டு 5 வகுப்பறைகள் (D Block) கட்டப்பட்டன. தற்போது (k block)

1973:- அரசு வழங்கிய ரூபா 20,000 ஐச் செலவிட்டு 5 வகுப்பறைகள் (C Block) கட்டப்பட்டன. ரூபா 25,000 செலவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தொழிற்கூடம் (A Block) திறந்து வைக்கப்பட்ட்து.

1974:- அரசு வழங்கிய ரூபா 20,000ஐச் செலவிட்டு நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டது (C Block)

1976:-ஒன்றரை இலட்சம் ரூபா செலவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட நூலகக் கட்டடம் திற்ந்து வைக்கப்பட்டது. அரசு வழங்கிய ஒன்றரை இலட்சம் ரூபா செலவில் 8 வகுப்பறைகள் அடங்கிய இரு மாடிக் கட்டடம் (H Block) கட்டப்பட்டது. 40,000 ரூபா செலவில் வடக்குப் புறமாக உள்ள காணியில் இருந்து எட்டுப் பரப்பு பெறப்பட்டது.

1977:-ரூபா 25,000 செலவில் பிரதான மண்டபம் செப்பனிடல் முதல் கட்டம் நிறைவேற்றப் பட்டது.

1978:-அரசு வழங்கிய ரூபா 87,000 ஐச் செலவிட்டு தொடக்கப் பள்ளிக்கென ஓர் இருமாடிக்கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

1979:- இரண்டாம் கட்டமாக ரூபா 50,000 செலவில் உடை மாற்றும் அறை, ஆசிரியர் தங்கும் அறை என்பன உட்பட பிரதான மண்டபம் மீண்டும் செப்பனிடப்பட்டது. அரசு வழங்கிய இரண்டு இலட்சம் செலவில் ஓர் இருமாடி வகுப்பறைக் கட்டடமும் ஓர் புதிய மனையியற் கூடமும் அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. திரு.மு.தா.சுப்பிரமணியம் அவர்களால் ஒரு குடிநீர்க் கிணறு (3வது கிணறு) அமைத்து உதவப்பட்டது.

1992:-தேச நிர்மாணிகளால் மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ஆரம்பிக்கப்பட்டது. (G மண்டபம்)

1998:-பாடசாலையின் பயன்பாட்டிற்காக பாடசாலையின் வடபகுதியில் 11 பரப்புக் காணி கொள்வனவு செய்யப்பட்டது. பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்திச் சபையும் இணைந்து ஐந்து வகுப்பறைகள் கொண்ட L மண்டபம் அமைத்து.

1999:-B மண்டபம் முழுமையாக செப்பனிட்டு நவீன மயப்படுத்தப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடம் புனரமைக்கப்பட்டது. கல்வித் திணைக்களத்தினதும், நலன் விரும்பிகளினதும் உதவியினால் T.V மண்டபம் நவீன மயப்படுத்தப்பட்டு வெற்றிவேலு கேட்போர் கூடமாக மாற்றப்பட்டது. கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 25 இலட்சம் ரூபா செலவில் 3 மாடிகள் கொண்ட மண்டபத்தின் கீழத்தள வேலைகள் பூர்த்தியாக்கப் பட்டது. F மண்டபமும், மனையியற் கூடமும் புனரமைக்கப்பட்டது. ஜேர்மன் தொழிநுட்ப அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட பிரிவினால் மாணவ, மாணவிகளுக்கான ததித்தனி கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. கல்வித் திணைக்கள அனுசரணையுடன் ஆய்வு கூட மண்டபமும் H மண்டபமும் இணைந்து நவீன கழிப்பறை அமைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (UNDP) சூழல் பாதுகாப்பிற்காக தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது. சிவாரேடிங் நிறுவனத்தினதும்   ஆர்.பி.எஸ் அரிசி ஆலை நிறுவனத்தினதும் அனுசரணையுடன் 250 அடி நீளமான மதிற்சுவர் அமைக்கப்பட்டது. ஐடியல் வேக்ஸ் நிறுவனத்தினரின் அனுசரணையுடன் புதிய வாயிற் கோயில் அமைக்கப்பட்டது. கல்லூரியின் பழைய மாணவன் திரு.நா.தபூபால சிங்கத்தின் அனுசரணையுடன் பிரதான வாயில் முகப்பு அமைக்கப்பட்டது.

2002:-பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி அவர்களால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதியில் இருந்து வழங்கப்பட்ட நிதியில் இருந்து வழங்கப்பட்ட நிதியில் இருந்து C,D மண்டபங்கள் புனரமைப்பிச் செய்யப்பட்டன. மத்திய கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட நிதியில் இருந்து F மண்டபம், ஆய்வு கூடம். அலுவலக் கட்டடற் தொகுதி புனரமைப்புச் செய்யப்பட்டன.

2003:-மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியில் இருந்து இரண்டு மாடிகள் கொண்ட நூலக கட்டடத் தொகுதி புனரமைப்புச் செய்யப்பட்டது. அதிபர் அறை, விஞ்ஞான ஆய்வு கூடம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

2004:-நூல்கக் கட்டடம் ஒரு பகுதி பூர்த்தியாக்கப்பட்டது. பிரதான வாயிற்கேற்ப புனரமைக்கப்பட்டது.

2006:-D,E கட்டடத்தொகுதி தரைப் புனரமைப்பு மத்திய அரசினால் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டது. பழைய மாணவர் சங்கதின் கிளை (இக்கிய இராச்சியம் உதவியினால் விளையாட்டு மைதானம் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.)

2007:-யுனிசெவ் நிதி உதவியுடன் T.V மண்டபம் புனரமைக்கப்பட்டது.

2008:-கல்லூரிப் பழைய மாணவர் சங்கமும் இக்கிய இராச்சியக் கிளையும்  இணைந்து பாடசாலைச் சூழலில் இருந்த 3 1/4 பரப்புக் காணியை 13 லட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்தன. பாடசாலை அபிவிருத்திச் சபையும் ஆசிரிய சகோத்ரத்துவமும் இணைந்து T.V மண்டபத்தின் பின் பகுதியில் 60*40 நீளமான துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

2009:-அரசாங்கத்தினதும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினையும் நிதி உதவியுடன் 160 அடி நீளமான C.D.E மண்டபப் பின்பக்க வெளிகள் கம்பிச்சட்ட வலைகளால் மூடப்பட்டன.

யுனிசெவ் அமைப்பினதும் பாடசாலை அபிவிருத்திச் சங்க அமைப்பினதும் நிதி உதவியுடன் அலுவகத்திற்கு முன்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தின் 70 அடி நீளத்திற்கு பாதுகாப்பு வலையமைப்பு அமைக்கப்பட்டது.

2009:-RAAN மண்டபத்திற்கு முன்பாக கல்லூரியின் பழைய மாணவியான அமரர் திருமதி சியாமளா ரவிச்சந்திரன் என்பவரின் ஞாபகார்த்தமாக அவரது கணவர் கு.ரவிச்சந்திரன் அவர்களால் ரூபா 5 லட்சம் செலவில் அலங்கார முகப்பு வாயில் அமைக்கப்பட்டது.

2009:-வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 225 அடி நீளமான RAAN கட்டத்தின் மேற்றள வேலை பூர்த்தியாக்கப்பட்டது.

2009:-பாடசாலை பிரதான வீதியின் பக்கமுள்ள மதிற்சுவர்கள் செப்பனிடப்பட்டன.

2009:-பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடன் RAAN மண்டபத்தின் கீழ் தளம் ரூபா 2 லட்சம் செலவில் செப்பனிடப்பட்டது.

2009:-ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா யுனிசெவ்வின் உதவியுடன் RAAN கட்டடத்திற்கு முன்னால் குழாய்க் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது.

2009:-ஏப்ரல் மே மாதங்களில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி நிலையமாக இயங்கிய பின்னர் பாடசாலைக் கட்டடத்தொகுதி முழுவதும் சமகாலத்தில் வர்ணம் பூசப்பட்டது.

2011:-மாணவிகளுக்கான கழிப்பறைத் தொகுதி ஒன்றை (7 பகுதிகள்) யுனிசெவ் நிறுவனமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து அமைத்துள்ளது. வடகிழக்கு மூலைப்பகுதியில் 100 அடி நீளமதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது.

2011:-கல்லூரியி பேரூந்து பாதுகாப்புக்கட்டடம் ஒன்றை ரூபா 6 லட்சத்து 75 ஆயிரம் செலவில் ஆசிரிய சகோதரத்துவமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து அமைத்துள்ளது.

2011:-2 லட்சம் ரூபா செலவில் பழைய மாணவர் சங்கத்தினால் கிரிக்கட் பயிற்சித்திடல் ஒன்று அமைக்கப்பட்டது.

2011:-பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் யுனிசெவ் நிறுவனமும் இணைந்து 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபா செலவில் புதிய சமையற் கூடம் ஒன்று அமைக்கப்பட்டது.

2011:-பாடசாலை அபிவிருத்திச் சங்த்தினால் முஇடு மண்டபங்களுக்கு அரைச்சுவர் கட்டப்பட்டது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Twitter Bird Gadget