2012 ~ J/Chavakachcheri Hindu College

Saturday, September 15, 2012

Events and Days


பிரிவுபசார விழா

எமது கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வெளிநாடு செல்லும் திருமதி ஜெயகலா ஸ்ரீபாஸ்கரதாஸ், செல்வி கி.பிரபாநந்தினி ஆகிய இரு ஆசிரியைகளின் சேவையை கௌரவிக்கும் முகமாக கடந்த 19-11-2010 அன்று மாலை தேநீர் விருந்துபசார நிகழ்வு ஆசிரிய சகோதரத்துவத் தலைவரும் உப அதிபருமாகிய திரு.சி.இரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருமதி ஜெயகலா ஸ்ரீபாஸ்கரதாஸ் அவர்கள் நடன ஆசிரியராக கடந்த 9 ஆண்டுகள் எமது கல்லூரியில் சிறப்புற பணியாற்றியுள்ளார். செல்வி கி.பிரபாநந்தினி கற்பித்தலோடு கல்லூரி அலுவலகத்தில் நிர்வாகப்பகுதியிலும் சிறப்புற பணியாற்றி தனது உயர் கல்விக்காக வெளிநாடு செல்கின்றார். இவ்வாசிரியர்கள் மேலும் வாழ்வில் சகல பேறுகளும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்.


மகிந்த சிந்தனையில் பாடசாலை அபிவிருத்தித் திட்டம்.

மகிந்த சிந்தனையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள 1000 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வடமாகாணத்தில் 110 பாடசாலைகள் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தென்மராட்சிப் வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் எமது பாடசாலை முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 60 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைகள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


ஆசிரியர் தினம்- 2010.




எமது கல்லூரியில் ஆசிரியர் தினம் கடந்த 05.10.2010 அன்று காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திரு.கு.சதாசிவமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் அனுசரனையுடன் கல்லூரி மாணவத் தலைவர்கள், மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிரதம விருந்தினராக திரு.க.அருணாசலம் (முன்னாள் உப அதிபர்-யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் முன்னாள் அதிபர் திரு.இ.கயிலைநாதன் அவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலளர், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். முதலில் எமது கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள எமது வல்லூரி உப அதிபர் திரு.சி.த.இரத்தினம் அவர்களுக்கும், எமது கல்லூரி கணித ஆசானும் பகுதித் தலைவரும்மாகிய திரு.ந.அருட்சோதிவர்ணன் அவர்களுக்கும் பிரதம விருந்தினர் அவர்கள் கேடயம் வழங்கி கௌரவித்தனர்.

பரிசில் நாள் - 2010.





எமது கல்லூரி பரிசில் நாள் கடந்த 24.09.2010 வெள்ளிக் கிழமை பிரதான மண்டபத்தில் அதிபர் திரு.அ.கயிலாயபிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு.தி.இராசநாயகம் (பிரதி பிரதம செயலாளர், நிர்வாகம் - வடக்கு மாகாணம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.யோ.யெயக்குமார் (உதவிப் பதிவாளர், யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். ஐக்கிய இராட்சியத்தின் எமது பழைய மாணவர் ஆசிரியர் சங்க ஸ்தாபக உறுப்பினர் திரு.ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டார். மேலும் வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அலுவலர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், முதன்மை ஆசிரியர்கள், எமது கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் அதிபர் திரு.இ.கயிலைநாதன் அவர்கள், முன்னாள் உதவி அதிபர்கள் திரு.க.அருணாசலம், திரு.ச.சபாரத்தினம் ஆகியோரும், மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் மொழித்தினம் - 2010

வலயமட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்.

சிறுகதை - பிரிவு IV - அ.கஐன் - 11 A (1 ஆம் இடம்)
குறுநாடக பிரதியாக்கம் - பிரிவு IV - யெ.லாவண்யா - 11 D (1 ஆம் இடம்).
பிரிவு V (இசை) - சி.சிறிரேகா - 12 A (1 ஆம் இடம்).
நடனம் - பிரிவு II - ஈ.வித்தகி - 7 (1 ஆம் இடம்).
இசை குழு II - 1 ஆம் இடம்.
நாட்டார் பாடல் - திறந்த போட்டி - 1 ஆம் இடம்.
றடனம் குழு I - திறந்த போட்டி - 1 ஆம் இடம்.
இலக்கிய நாடகம் - திறந்த போட்டி - 1 ஆம் இடம்.
தமிழறிவு வினாவிடை - திறந்த போட்டி - 1 ஆம் இடம்.
இப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.


மாகாண மட்ட தமிழ் மொழித்தினம் - 2010

மாகாண மட்டப் போட்டியில் பங்கு பற்றிய நிகழ்வுகளில் இரண்டு முதலாமிடங்கள் எமது கல்லூரிக்கு கிடைத்துள்ளன. வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்.

தனி நடனம் - பிரிவு II - ஈ.வித்தகி - 1 ஆம் இடம்.
தமிழறிவு வினாவிடை - திறந்த போட்டி - 1 ஆம் இடம். இதில் பங்கு பற்றிய மாணவர் விபரம்.
ச.குகப்பிரியா - 12 A2
வ.சரவணபவன் - 12A1
த.கஸ்தூரி - 12 A2
நி.கீர்த்தனா - 13 A
ஸ்ரீ.றம்யா - 11 D


சைவபரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட தமிழ் மொழி சைவநெறிப் பாடப்பரீட்சை - 2009

யாழ் சைவபரிபாலன சபையினரால் 2009 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அகில இலங்கை சைவநெறித்தேர்வில் சைவநெறி மற்றும் தமிழ் மொழி ஆகிய படங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்.
சைவநெறி.

தரம் - 6 ம.சுர்த்திகா 3 ஆம் இடம்.
தரம் - 7 சி.கார்த்திகா 1 ஆம் இடம்.
தரம் - 11 ச.சரண்யா 1 ஆம் இடம்.
இ.இராஐப்பிரவிந்தன் 3 ஆம் இடம்.
இந்து நாகரிகம்
தரம் - 12 லோ.மயுரி 1 ஆம் இடம்.
ம.ஆரணிக்கா 3 ஆம் இடம்.
தமிழ் மொழி
தரம்- 11 இ.இராஐப்பிரவிந்தன் 1 ஆம் இடம்.
ச.கஸ்தூரி 2 ஆம் இடம்.
பா.வனிதா 3 ஆம் இடம்.
இதில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டுவதோடு மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகிறேம்.

Tour and Survices


கல்விச் சுற்றுலா - 2010.





பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களால் நடாத்தப்பட்ட கல்விக் கண்காட்சியை எமது கல்லூரியைச் சேர்ந்த க.பொ.த (உ/த) விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் சென்று பார்வையிட்டனர். பொறுப்பாசிரியர்களாக செல்வி இ.நடராசா, செல்வி க.துஷ்யந்தி, செல்வி ப.சைந்தவி, திரு.S.சதாசிவம், திரு.ச.சசிஸ்குமார், திரு.ஆ.வைகுந்தன், திரு.P.உதயகுமார் ஆகியோர் இம் மாணவர்களை அழைத்துச் சென்றனர். இன்றய நவீன அறிவியல் வளர்ச்சியுடன் போட்டி போட்டு மாணவர்கள் தம் அறிவை விருத்தி செய்து கொள்ள இத்தகைய களப்பயணங்கள் அவசியமாணவையாகும்.


சேவை நயப்பும் பாராட்டும்.




எமது கல்லூரியில் 21 வருடங்களாக அர்ப்பணிப்போடு பணியாற்றி எல்லோரதும் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமான ஆசிரியரும் பகுதித் தலைவரும் கணித ஆசானுமாகிய திரு.ந.அருட்சோதிவர்ணன் அவர்கள் இவ்வாண்டு ஓய்வு பெறவுள்ளார். தனது 38 வருட சேவையில் 21 வருட காலம் இந்துவின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றியவர். இவரது ஓய்வுக் காலம் நல்ல தேக ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் சிறக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


கழுத்துப் பட்டி அறிமுகம்.

14-05-2010 ஆந் திககி முதல் எமது கல்லூரியில் ஆண் மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Achievements and news

தேசிய ரீதியில் சாதனை

எமது கல்லூரி மாணவர் குழு கொழும்பிலே நடைபெற்ற 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட தமிழ் மொழித்தின தமிழறிவு வினாவிடைப் போட்டியில் பங்குபற்றி தேசிய நிலையில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர். இக் குழுவில் பங்குபற்றிய மாணவர்கள் வருமாறு..

வ.சரவணபவன்
ச.குகப்பிரியா
த.கஸ்தூரி
நி.கீர்த்தனா
ஸ்ரீ.ரம்மியா



இம் மாணவர்களை வாழ்த்துவதோடு மேலும் இவர்கள் சாதனைகள் படைக்க வாழ்த்துகின்றோம்.அகில இலங்கை ரீதியில் தங்கப்பதக்கம்
அகில இலங்கை உயிரியல் ஒலிம்பியாட் போட்டி - 2010 இல் எமது கல்லூரி மாணவன் செல்வன் ஸ்ரீமுருகதாஸ் விசாகன் தங்கப்பதக்கத்தைப் பெற்று எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். உயிரியற் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையில் ஒவ்வொரு வருடமும் இப்போட்டிப் பரீட்சை நடாத்தப்படுவது குறிப்படத்தக்கது.


தேசிய மட்டத்தில் முதலிடம்.

எமது கல்லூரியில் தரம் 11 இல் கல்விபயிலும் மாணவி செல்வி ஸ்ரீ.ரம்மியா , சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு தேசிய ரீதியில் ”சிறுவர் உலகம் ஒளிபெற அனைத்து கரங்களையும் வலுவுட்டுவோம்” என்ற தொனிப் பொருளில் நடத்திய கட்டுரைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று 10000 ரூபா பணப் பரிசிலையும் சான்றிதழையும் மாண்பு மிகு ஐனாதிபதி அவர்களிட்ம் இருந்து பெற்றுக் கொண்டார்.


தமிழ் மொழித்தினம் தேசிய மட்டத்தில் சாதனை.

தமிழ் மொழித் தினம் - 2009 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்டப் போட்டியில் பிரிவு IV கட்டுரை எழுதுதலும் இலக்கியம் நயத்தலும் எனும் விடயத்தில் எமது கல்லூரி மாணவன் செல்வன் இ.இராஐப்பிரவிந்தன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்று எமது கல்லூரிக்குப் புகழ் சேர்த்துள்ளார். இம் மாணவன் மேலும் சிறப்புப் பெற வாழ்த்துவதோடு இவரை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.


வடமாகாண சாரணர் பாசறை - 2010.

மேற்படி சாரணர் பாசறையில் கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பாக எமது கல்லூரியின் சாரணர் அணியினர் 21 பேர் பங்குபற்றினர். யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாகவுள்ள பழைய புங்காவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் தலைவராக வடமாகாண சாரணர் ஆணையாளர் திரு.போஐன் விளங்கினார். இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு 15-05-2010 காலை 10 மணியளவில் ஆரம்பமானது. பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் திரு சந்திரசிறி, அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வருகை தந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக இலங்கை சாரணர் தலைவர் பட்டுவாங்கல மற்றும் திட்டப் பணிப்பாளர் திரு பிரதீபன், யாழ்நகர சபை மேஐர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, September 11, 2012

About School Details


பாடசாலையின் பெயர்: யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி

பாடசாலையின் தரம்: 1AB(தேசிய பாடசாலை)

தபால் விலாசம்: A9 வீதி, சங்கத்தானை, சாவகச்சேரி.

தொலை பேசி இல: 021-2270320, 021-2270321

வகுப்புக்கள்: தரம் 6-13 வரை(கலவன்)
founder
thamotharam pillai
கிராம அலுவலர் பிரிவு இலக்கம்: சாவகச்சேரி வடக்கு J/303

மின்னஞ்சல்: chavahindu@gmail.com

இணைய முகவரி: WWW.chc.sch..lk

பாடசாலை இலக்கம்(ID No): 1003002

கல்லூரி ஆரம்பம்: 1904

நிறுவுநர்: அமரர் வி.தாமோதரம்பிள்ளை அவர்கள்.             

தேசிய பாடசாலையான தினம்: 05.02.1993

வருடாந்த தொகை மதிப்பு இல: 09353

தரம் 9 மாகாண மட்டப் பரீட்சை பாடசாலை இல: C002

க.பொ.த(சா/தா),(உ/த)பரீட்சை பாடசாலை இல: 11436

பழைய மாணவர் சங்க கணக்கு இல: 110100120000459 மக்கள் வங்கி, சாவகச்சேரி.

பாடசாலை அபிவிருத்திச் சங்க கணக்கிலக்கம்: 110100140000415 ம.வ.சா

தர உள்ளீட்டுக் கணக்கிலக்கம்: 11010018000833 ம.வ.சா

வசதிகள் சேவைகள் கட்டண கணக்கு இலக்கம்: 11010019000192 ம.வ.சா

கணனி ஆய்வு கூட கணக்கிலக்கம்: 110100130000699 ம.வ.சா

principal
kailaya pillai
ஆசிரியர் சம்பள கணக்கு இலக்கம்: 110100170000013

அதிபர் பெயர்: திரு அருணாசலம் கயிலாயபிள்ளை

அதிபர் முகவரி: அல்லாரை வீதி, மீசாலை கிழக்கு, மீசாலை

தொலைபேசி: 021-2270378

மின்னஞ்சல்: akailash03@gmail.com

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Twitter Bird Gadget